கிருஷ்ணகிரி: அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்-கைகளை வலியுறுத்தி, நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டத் தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் துரை, துணைத்தலைவர் சரவணபவன், இணை செய-லாளர் ரங்கநாதன், பி.எஸ்.என்.எல்., சங்க முனியன், மின்வாரி-யத்துறை முனிரத்தினம் ஆகியோர் பேசினர்.ஆர்ப்பாட்டத்தில், சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்த படி, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயது முடிந்-தவர்களுக்கு, 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் அளிக்க வேண்டும். பட்டு வளர்ச்சித் துறையில் தினக்கூலி, சத்துணவு, அங்கன்வாடி, வனக்காவலர், வருவாய் கிராம உதவியாளர்கள், பஞ்., எழுத்தர் மற்றும் விடுபட்டவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூ-தியம், 7,850 ரூபாய் வழங்க வேண்டும். மருத்துவக்காப்பீடு திட்ட குளறுபடிகளை நீக்கி, காசில்லா மருத்துவ காப்பீட்டை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு வழங்கியதை போன்று அகவிலைப்படியை நிலுவையுடன் உடனே வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர்.