கொள்ளையர்களை பிடிக்க ஆந்திரா விரைந்த தனிப்படை
கிருஷ்ணகிரி: பர்கூரில், விவசாயியை தாக்கி நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றவர்களை பிடிக்க, தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்-துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த கல்லேத்துப்பட்டியை சேர்ந்தவர் சுந்தரேசன், 55, விவசாயி. கடந்த, 13 அதிகாலை, இவரது வீட்டிற்கு வந்த, 3 முகமூடி கொள்ளையர்கள், கத்தியால் அவரை தாக்கி, 22 பவுன் நகை மற்றும், 50,000 ரூபாயை கொள்-ளையடித்து சென்றனர். கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., தங்க-துரை கொள்ளை நடந்த இடத்தில் ஆய்வு செய்தார். டி.எஸ்.பி.,க்கள் முத்துகிருஷ்ணன், சீனிவாசன் தலைமையில், 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 'சிசிடிவி' காட்சிகள், மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட விதத்தை வைத்து, திருப்பத்தூர் மாவட்-டத்தில் நடந்த கொள்ளை சம்பவங்கள் போல் நடந்தது கண்டுபி-டிக்கப்பட்டது. அப்பகுதிகளில், கொள்ளை சம்பவங்களில் ஈடு-பட்டது, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கொள்ளை கும்பலா என போலீசார் விசாரிக்கின்றனர்.தனிப்படை போலீசார், ஆந்திர மாநிலத்தில் சந்தேகப்படும் சிலரை தேடி விரைந்துள்ளனர். மேலும் கர்நாடக மாநிலம் மற்றும் தர்மபுரி மாவட்டத்திலும், முகாமிட்டு கொள்ளையர்-களை தேடி வருகின்றனர்.