உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சேதமான அரசு பள்ளி கட்டடத்தில் இயங்கும் அங்கன்வாடி மையம்

சேதமான அரசு பள்ளி கட்டடத்தில் இயங்கும் அங்கன்வாடி மையம்

போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட, களர்பதி பஞ்., களர்பதி கிராமத்தில் பழுதான அரசுப்பள்ளி கட்டடத்தில் கடந்த, 2 ஆண்டுகளுக்கு மேலாக களர்பதி அங்கன்வாடி மையம்-1, அங்கன்வாடி மையம்-2, என, 2 மையங்கள் ஒரே கட்டடத்தில் இயங்கி வருகின்றன. இந்த, 2 அங்கன்வாடி மையங்களிலும், 30க்கும் மேற்பட்ட இளம் சிறார்கள் சென்று வருகின்றனர்.இந்த மையம் செயல்பட்டு வரும் பள்ளி கட்டடம் சேதமாகி, பயன்படுத்த முடியாமல் இருந்து வரும் நிலையில், அதில் சிறார்களை அனுமதித்து, அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருவது, அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அங்கன்வாடி மையத்திற்கு வரும் சிறார்கள் கட்டடத்தினுள் படுத்து உறங்கும் காட்சி, காண்போரை அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன், சம்மந்தப்பட்ட அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை