மேலும் செய்திகள்
பென்சன் வழங்கக்கோரி மடிப்பிச்சை போராட்டம்
10-May-2025
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பட்டை நாமம் இட்டு, மடிப்பிச்சை ஏந்தி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட தலைவர் குணவதி தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் மதியழகன், மாவட்ட செயலாளர் வெண்ணிலா, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட செயலாளர் பெர்னான்ட், சத்துணவு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் முருகம்மாள் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.பட்டை நாமம் இட்டு, மடிப்பிச்சை ஏந்தும் இப்போராட்டத்தில், தேர்தல் கால வாக்குறுதிபடி சிறப்பு பென்சன், 6,750 ரூபாய் வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதி, 311ன் படி, கால முறை ஊதியம் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷம் எழுப்பி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10-May-2025