மேலும் செய்திகள்
கலைத்திருவிழா போட்டி மாணவ, மாணவியர் பங்கேற்பு
18-Oct-2025
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், கடந்த மூன்று நாட்களாக கலைத் திருவிழா நிகழ்ச்சிகள் நடந்தன. தனி நடனம், குழு நடனம், பேச்சு போட்டி, கவிதை போட்டி, சொல்லிசை போட்டி, பாட்டு போட்டி, மவுன நாடகம் மற்றும் இசை போட்டி போன்ற, 30 வகையான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் முருகன் தலைமை வகித்தார்.மின்னணுவியல் துறை தலைவர் அருள்குமார் வரவேற்றார். கந்திகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கஸ்துாரி, போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கி பேசினார்.
18-Oct-2025