உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரி அருகே ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து கொள்ளை

கிருஷ்ணகிரி அருகே ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து கொள்ளை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி , குப்பம் சாலை மகாராஜா அருகே உள்ள எஸ்பிஐ வங்கியின் ஏ.டி.எம்.,ஐ உடைத்து பல லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் ஏடிஎம் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு குந்தாரப்பள்ளி, ஓசூர் பகுதிகளிலும் ஏடிஎம் கொள்ளை நடந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை கிருஷ்ணகிரி குப்பம் சாலை, மகாராஜகடை அருகே உள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம்ஐ உடைத்து மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.கொள்ளை நடந்த போது காவலாளிகள் யாரும் அங்கு இல்லாததும், சிசிடிவியில் ஸ்பிரே அடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் போலீசார் முதல் கட்ட விசாரணையில் தெரிந்துள்ளது. இது குறித்து மகாராஜ கடை போலீசார் விசாரித்து வருகின்றனர். மாவட்டத்தில் அடுத்தடுத்து ஏடிஎம் கொள்ளை நடந்த போதும் முக்கிய குற்றவாளிகளை போலீசார் இதுவரை பிடிக்கவில்லை. ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் வட மாநிலத்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை