மேலும் செய்திகள்
செய்திகள் சில வரிகளில்...
3 hour(s) ago
மேட்டூர், காவிரியில் கரை ஒதுங்கிய, 60 வயது ஆண் சடலத்தை கொளத்துார் போலீசார் மீட்டனர்.தமிழக-கர்நாடகா எல்லையிலுள்ள நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், கடந்த இரு நாட்களாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு நேற்று முன்தினம், 59,123 கனஅடியாக அதிகரித்தது.நேற்று மாலை கொளத்துார், காவேரிபுரம், கோட்டையூர், பத்ரகாளியம்மன் கோவில் அருகே காவிரியாற்றில், 60 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலம் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது. சடலத்தை கொளத்துார் போலீசார் மீட்டு, மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். காவிரியில் இறந்து கரை ஒதுங்கிய முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து கொளத்துார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 hour(s) ago