உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கசிவுநீர் குட்டையில் வீட்டுமனை பட்டா: கிராம மக்கள் கடும் எதிர்ப்பு

கசிவுநீர் குட்டையில் வீட்டுமனை பட்டா: கிராம மக்கள் கடும் எதிர்ப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஒன்றியம் கம்மம்பள்ளி பஞ்., பில்லக்கொட்டாய் கிராமத்தில், 8 ஏக்கரில் கசிவுநீர் குட்டை உள்ளது. இது அப்பகுதி மக்களின் நீர் ஆதாரமாக உள்ளது. இந்த இடத்தை அரசு ஆவ-ணங்களில் நீர்நிலைகள் என பதிவு செய்யாமல், கல்லாங்குத்து புறம்போக்கு என உள்ளதால், இங்கு, 28 பேருக்கு பட்டா வழங்க அலுவலர்கள் முடிவு செய்து, 8 பேருக்கு பட்டா வழங்கி உள்-ளனர். மீதமுள்ளவர்களுக்கு பட்டா வழங்க கசிவுநீர்குட்டையின் கரையை உடைத்து சமன் செய்யும் பணியை நேற்று மேற்கொண்-டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கம்மம்பள்ளி பஞ்., தலைவர் சென்றாயப்பன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து, பில்லக்கொட்டாய் கிராம மக்கள் கூறுகையில், 'கடந்த, 46 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியின் வறட்சியால், நீரை சேமிக்க இங்கு கசிவுநீர் குட்டை அமைக்கப்பட்டது. அப்-போதே நீர்வழித்தடங்கள், கரை பகுதி மற்றும் உபரிநீர் வெளி-யேறும் பகுதியில் சிமென்ட் தடுப்பணை அமைக்கப்பட்டது. மழைக்காலங்களில் இக்குட்டையில் தண்ணீர் தேக்கி பயன்படுத்-துகிறோம். கிருஷ்ணகிரி படேதலாவ் ஏரியில் இருந்து பர்கூர் வட்-டத்திலுள்ள ஏரிகளுக்கு செல்லும் வாய்க்கால், இந்த கசிவுநீர்-குட்டை வழியாகத்தான் செல்கிறது. மாவட்ட நிர்வாகம் கசிவுநீர்-குட்டையை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். இதனிடையே நேற்று, கம்மம்பள்ளி பஞ்., அலுவலகத்தில், தலைவர் சென்றாயப்பன் தலைமையில் நடந்த அவசர கூட்-டத்தில், பில்லக்கொட்டாய் கிராமத்தில் சர்வே எண், 186-ல் உள்ள அனைத்து நிலமும் நீர்நிலை என, வருவாய்துறை ஆவணங்களில் பதிவு செய்ய வேண்டும், இதற்கு பில்லக்கொட்டாய் ஏரி என பெயரிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி, கிருஷ்ணகிரி தாசில்தாருக்கு அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை