முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், முதல்வர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டு போட்டிகள் கடந்த மாதம், 26 முதல் நடந்து வருகிறது. நேற்று பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டில், கோ-கோ போட்டியில், 360 மாணவர்களும், கையுந்து பந்து போட்டியில், 1,152 பேரும், தடகள போட்டியில், 450 பேரும், கேரம் போட்டியில், 427 மாணவ, மாணவியரும் என மொத்தம், 2,389 பேர் பங்கேற்றனர். போட்டியின் துவக்க நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் வரவேற்றார். ஊரக வளர்ச்சி முகமை உதவி இயக்குனர் மகாதேவன் போட்டிகளை துவக்கி வைத்தார். முன்னாள் பஞ்., தலைவர் கோவிந்தராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.இப்போட்டிகள் கடந்த மாதம், 26ல் துவங்கி வரும், 12 வரை, பள்ளி, கல்லுாரி, மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என, 5 பிரிவுகளில், 37 விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு, 3,000 ரூபாய், 2ம் பரிசு, 2,000 ரூபாய், 3ம் பரிசு 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.