உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பிரத்யங்கிரா தேவி கோவிலில் மிளகாய் வத்தல் யாகம்

பிரத்யங்கிரா தேவி கோவிலில் மிளகாய் வத்தல் யாகம்

ஓசூர், ஓசூர் அருகே, மோரனப்பள்ளியில் உள்ள ராகு, கேது அதர்வன மகா பிரத்யங்கிரா தேவி கோவிலில், ஆடி மாத பவுர்ணமி மற்றும் வரலட்சுமி பண்டிகையையொட்டி, நேற்று முன்தினம் இரவு, மூலவர் பிரத்யங்கிரா தேவி மற்றும் காலபைரவர், ராகு, கேதுவிற்கு சிறப்பு பூஜை, அபிஷேக, அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, மிளகாய் வத்தல் யாகம் நடந்தது. கண் திருஷ்டி, செய்வினை, பில்லி, சூனியம், துஷ்ட சக்திகள் விலக, மிளகாய் வத்தலை, ஹோம குண்டத்தில் பக்தர்கள் போட்டனர்.திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதி முன்னாள், அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பன்னீர்செல்வம் மற்றும் கர்நாடகா, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை