உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் திருத்தங்கள் மேற்கொள்ள கலெக்டர் அழைப்பு

கிருஷ்ணகிரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் திருத்தங்கள் மேற்கொள்ள கலெக்டர் அழைப்பு

கிருஷ்ணகிரி: ''வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்களை, புதிய வாக்காளர்கள் மற்றும் திருத்தம் மேற்கொள்ளப்-பட வேண்டிய வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை முன்னிட்டு, மாவட்டத்தில் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடந்தது. கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்-பட்ட அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்-சாவடி மையத்தில் நடந்த முகாமில், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான தினேஷ்குமார் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கிருஷ்ணகிரி மாவட்டத்தின், 6 சட்டசபை தொகுதிகளில், 1,149 ஓட்டுச்சாவடிகளில் வாக்-காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம் நடக்கிறது. இன்று, 2026, ஜன.,3, 4 தேதிகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. 2026, ஜன.,1ல், 18 வயது நிரம்பியவர்கள் புதிய வாக்காளர்களாக தங்களை இணைத்து கொள்ளலாம். வரைவு வாக்காளர் பட்-டியலில் இடம் பெறாத வாக்காளர்கள் வரும், ஜன.,18க்குள் உரிய ஆவணங்களை சமர்பித்து வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ளலாம்.புதிதாக பெயர் சேர்த்தலுக்கு படிவம் 6, பெயரை நீக்க படிவம் 7, வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்தல் போன்றவற்றிக்கு படிவம் 8 ஆகிய-வற்றை பெற்று, அந்தந்த ஓட்டுச்சாவடி மையங்-களில் நடக்கும் சிறப்பு முகாம்களில் உரிய ஆவ-ணங்களை சமர்ப்பித்து, வாக்காளராக தங்களை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் வாக்கா-ளர்கள் வீட்டிலிருந்தே விண்ணப்பிக்க https://voters.eci.gov.in என்ற இணையதள முகவரி-யிலும், மொபைலில் Voters Helpline App செயலி-யினை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்-கலாம். மேலும், 04343- 1950 என்ற எண்ணில் அழைத்து தங்களின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கமும் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.கிருஷ்ணகிரி தாசில்தார் ரமேஷ், துணை தாசில்தார் கணேசன் மற்றும் துறை சார்ந்த அலு-வலர்கள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை