எம்.ஜி.ஆர்., கல்லுாரியில் கணினி பயன்பாட்டியல் துறை கருத்தரங்கம்
ஓசூர் :கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் எம்.ஜி.ஆர்., கல்லுாரியில், கணினி பயன்பாட்டியல் துறை சார்பில், இரு நாள் கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி முதல்வர் முத்துமணி தலைமை வகித்தார். கணினி பயன்பாட்டியல் துறை தலைவர் சிவராமன் வரவேற்றார். பெங்களூரு மைக்ரோலாண்ட் நிறுவனத்தின் மாற்றம் மற்றும் வெளியீட்டு மேலாளர் பிரதீபா சிவசண்முகம், பிளாக் ஷிப் வலையொளி தலைமை நிர்வாக அலுவலர் விக்னேஷ்காந்த் ஆகியோர், மாணவ, மாணவியரை ஊக்கப்படுத்தி பேசினர்.மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு பகுதிகளில் உள்ள கல்லுாரிகளில் இருந்து மொத்தம், 450-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். கணினி பயன்பாட்டியல் துறை பேராசிரியர் பரணி நன்றி கூறினார்.