உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஊத்தங்கரையில் மழை பாதிப்பு காங்., மாநில தலைவர் ஆய்வு

ஊத்தங்கரையில் மழை பாதிப்பு காங்., மாநில தலைவர் ஆய்வு

ஊத்தங்கரை, டிச. 8-ஊத்தங்கரையில் கடந்த சில நாட்களுக்கு முன், 'பெஞ்சல்' புயல் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தமிழக, காங்., தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று சிங்காரப்பேட்டை, ஊத்தங்கரை பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள ஏரி நிரம்பி நீர் வெளியேறி பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.பிறகு, நிருபர்களிடம் அவர் கூறுகையில், ''ஊத்தங்கரை பகுதியில் பெய்த, 51 செ.மீ., மழை, சென்னையில் பெய்திருந்தால், சென்னையே காணாமல் போயிருக்கும். மத்திய அரசு, தமிழகத்திற்கும், காங்., ஆட்சியில் உள்ள மாநிலத்திற்கும் நிதி வழங்காமல் வஞ்சிக்கிறது,'' என்றார்.கிருஷ்ணகிரி, காங்., எம்.பி., கோபிநாத், மாநில துணைத்தலைவர் சேதுராமன், மாநில செயலாளர் ஆறுமுகம், அகில இந்திய, காங்., கமிட்டி உறுப்பினர் குமரேசன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் ரஜினிசெல்வம், உட்பட காங்., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை