வெள்ள பாதிப்பை தடுக்க ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும்: ஜி.கே.மணி
கிருஷ்ணகிரி: ''வெள்ள பாதிப்பை தடுக்க, ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும்,'' என, பா.மக., கவுரவ தலைவர் ஜி.கே.மணி கூறினார்.கிருஷ்ணகிரியில், பா.ம.க., மத்திய மாவட்ட நிர்வாகிகள் ஆலோ-சனை கூட்டத்தில் பங்கேற்ற பின், அவர் நிருபர்களிடம் கூறியதா-வது:வரும், 21ல் திருவண்ணாமலையில் தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில மாநாடு நடக்க உள்ளது. இதில், உழவர் பேரியக்க நிறு-வனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி பங்கேற்கின்றனர். மாநிலம் முழுவதும் இருந்து, 10 லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளனர். பா.ம.க., எந்த அணியில் சேருகிறதோ, அதுவே வெற்றி கூட்டணி என பேசுகின்றனர்.தமிழகத்தில், கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டு வீடுகள் இடிந்து, பயிர்கள் சேதமாகி, நிலம் சரிந்துள்-ளது. தமிழகம் வறட்சி மற்றும் கன மழையை சந்திக்கும் மாநில-மாக உள்ளது. இவற்றை சீர் செய்ய, ஆறுகளின் குறுக்கே தடுப்-பணை கட்டி, ஒரு சொட்டு தண்ணீரும் வீணாக கடலுக்குள் செல்-லாதவாறு தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடந்த வாரம் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை திறக்கப்பட்டு, சாத்தனுார் அணை நிரம்பி, கடலுார் மாவட்டத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டது. கிருஷ்ணகிரியில் இருந்து, கடலுார் வரை தடுப்பணைகள் கட்டியிருந்தால், வெள்ளச்சேதம் ஏற்பட்டிருக்-காது. தண்ணீர் பற்றாக்குறைக்காக மற்ற மாநிலங்கை நம்பி கையேந்தி நிற்கிறோம். ஆறுகளில் தடுப்பணை கட்டுவதால், குடிநீர் பிரச்னை தீர்வதோடு, விவசாயம் செழிக்கும். தொழில் நிறுவனங்களும் பயன்பெறும்.சமீபத்தில் பெய்த கன மழையால் ஊத்தங்கரை, போச்சம்பள்-ளியில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ள பாதிப்புக்கு எந்த ஆட்சியையும் குறை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு மாவட்டத்திற்கும், ஒரு நல்ல அதிகாரியை நியமித்து, வெள்ள பாதிப்புகளை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும். மத்திய அரசு உடனடியாக பேரிடர் நிவா-ரணம் வழங்க வேண்டும்.கிருஷ்ணகிரியில் ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பூக்கள், காய்கறி உற்பத்தி அதிகமாக உள்ளது. இதற்காக பெரிய விற்பனை சந்தையை, வணிக வளாகத்தை உருவாக்க வேண்டும். மத்திய, மாநில அர-சுகள் முனைப்போடு செயல்பட்டு, ஓசூரில் விமான நிலையம் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு கூறினார்.