| ADDED : டிச 31, 2025 06:22 AM
போச்சம்பள்ளி,: கிருஷ்ணகிரி மாவட் டம், மத்துார் அடுத்த, சாலுார் கிராமத்தில், பழமையான தேசத்து மாரி-யம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வோர் ஆண்டும் மார்கழி மாதம் திருவிழா நடக்கும்.இதையொட்டி வாலிப்பட்டி, கண்ணுகானுார், கருப்பேரி, பெரமனுார், வேலாவள்ளி, கொட்ட-பள்ளனுார் உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்ட கிராமங்-களை சேர்ந்த மக்கள் பொங்கலிட்டு, மாவிளக்கு, கரகம் எடுத்து வந்தனர். வாணவேடிக்கையுடன், 1,000க்கும் மேற்பட்ட ஆடுகளை பக்தர்கள் பலி-யிட்டு திருவிழாவை நேற்று கொண்டாடினர். விழாவை காண சுற்று வட்டார பகுதிகளிலிருந்து, 2,000க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். மத்துார் இன்ஸ்பெக்டர் பத்மாவதி தலைமையில், 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.