உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரி நகராட்சி ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு பெட்டகம் வழங்கல்

கிருஷ்ணகிரி நகராட்சி ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு பெட்டகம் வழங்கல்

கிருஷ்ணகிரி நகராட்சி ஊழியர்களுக்குதீபாவளி பரிசு பெட்டகம் வழங்கல்கிருஷ்ணகிரி, அக். 27-கிருஷ்ணகிரி நகராட்சியில் பணிபுரியும் துாய்மை காவலர்கள், துாய்மை பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் தீபாவளி பரிசு பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி, தி.மு.க., நகர செயலாளர் நவாப், சுகாதார அலுவலர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். நகராட்சி தலைவர் பரிதா நவாப், தலைமை வகித்து, துாய்மை பணியாளர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி பேசியதாவது: கிருஷ்ணகிரி நகராட்சியில், பல்வேறு பணிகளில், 560 பேர் பணிபுரிகின்றனர். இதில், துாய்மை பணியாளர்களின் பணிக்கு ஈடே இல்லை. 'விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான், நாம் சோற்றில் கை வைக்க முடியும்' என்பர். அதுபோல, துாய்மை பணியாளர்கள் இல்லையென்றால் நகராட்சி பகுதிகள் நாறி விடும். எனவே, அவர்களுக்கான தேவைகளை பார்த்து, பார்த்து செய்கிறோம். தீபாவளி பண்டிகையை அவர்களோடு இணைந்து கொண்டாடும் வகையில், ஒவ்வொருவருக்கும் புடவை, துணி, பட்டாசு, இனிப்பு அடங்கிய பரிசு பெட்டகம் வழங்கப்படுகிறது. துாய்மை பணியாளர்கள் மட்டுமின்றி, அலுவலகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் தலா, 2,000 ரூபாய் மதிப்பில், 11.20 லட்சம் ரூபாய்க்கு தீபாவளி பரிசு பெட்டகம், என் சொந்த செலவில் வழங்குகிறேன். ஒவ்வொரு விசேஷ நாட்களிலும் துாய்மை பணியாளர்களுக்கு உதவிகள் செய்து வருகிறோம். அதுபோல் உங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால், அதை நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.நகராட்சி துணைத்தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, நகராட்சி கவுன்சிலர்கள், கனல் சுப்பிரமணி, ஜான் டேவிட், சுஹேல் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள், நகராட்சி ஊழியர்கள் உட்பட, 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை