கிருஷ்ணகிரியில் குணம் மருத்துவமனை திறந்து வைத்த மாவட்ட கலெக்டர்
கிருஷ்ணகிரி, ஓசூரில், குணம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, 11 ஆண்டுகளாக இயங்குகிறது. இதன் புதிய கிளை, கிருஷ்ணகிரியில் உள்ள சேலம் பைபாஸ் சாலையில், ராயக்கோட்டை மேம்பாலம் அருகே அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. குணம் மருத்துவமனை இயக்குனர்கள் டாக்டர்கள் செந்தில், பிரதீப் குமார், பிரபுதேவ், கார்த்திக் பாண்டியன், தம்பிதுரை, சுப்பிரமணியன், ஜாகீர் உசேன், ராஜேஷ் பி அய்யர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் தினேஷ் குமார் மருத்துவமனையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். தொடர்ந்து, மருத்துவமனையில் உள்ள சிகிச்சை பிரிவுகளை பார்வையிட்டார். கிருஷ்ணகிரி குணம் மருத்துவமனையில், மேம்படுத்தப்பட்ட ஆஞ்சியோ லேப் வசதியுடன் கூடிய இருதய நோய் சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சை, பொது அறுவை மற்றும் லேப்ராஸ் ஸ்கோபி அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், மகப்பேறு மருத்துவம், இரைப்பை, குடல் மருத்துவம், எலும்பு முறிவு, எலும்பு மூட்டு மருத்துவம், தீவிர சிகிச்சை, விபத்து, காது, மூக்கு தொண்டை மருத்துவ பிரிவுகள் உள்ளன. பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன், வேப்பனஹள்ளி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., முனுசாமி, கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ., அசோக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., செங்குட்டுவன் உட்பட பலர் பங்கேற்றனர்.