ஓசூர் : கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை:ஓசூரிலுள்ள தளி சாலை சென்னீஸ் மகாலில் வரும், 25ல் காலை, 10:00 மணிக்கு, மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமையில், மாவட்ட செயற்குழு கூட்டம் நடக்கிறது. முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், மாநகர மேயர் சத்யா முன்னிலை வகிக்கின்றனர். உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசுகிறார். கூட்டத்தில், கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழா, தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசின் மூன்றாண்டு சாதனை, வாக்கு எண்ணிக்கை முகவர்கள் மற்றும் கட்சி ஆக்க பணிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. எனவே, மாநகர, ஒன்றிய, பேரூர், பகுதி செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட அணிகளின் தலைவர்கள், துணைத்தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், இன்னாள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.