உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / லோக்சபா தேர்தலில் கருத்து வேறுபாடுகளை மறந்து அதிக ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க., வெல்ல வேண்டும்

லோக்சபா தேர்தலில் கருத்து வேறுபாடுகளை மறந்து அதிக ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க., வெல்ல வேண்டும்

கிருஷ்ணகிரி: ''கருத்து வேறுபாடுகளை மறந்து, லோக்சபா தேர்தலில், கிருஷ்ணகிரி தொகுதியில், தி.மு.க.,வை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்,'' என, அமைச்சர் சக்கரபாணி பேசினார்.கிருஷ்ணகிரியில், தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்த, பாக முகவர்கள் மற்றும் ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டத்தில், அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது:லோக்சபா தேர்தலுக்கு இன்னும், 70 முதல், 80 நாட்களே உள்ளன. வாக்காளர்களிடம் தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி ஓட்டு கேட்க வேண்டும். கருத்து வேறுபாடு இருந்தாலும், அவற்றை மறந்து, ஒன்றிணைந்து, வெற்றிக்கு பாடுபட வேண்டும். கடந்த, 2019 லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் திண்டுக்கல் தொகுதியில், 5.40 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். இந்திய அளவில் இது, 3வது பெரிய வெற்றி. கடந்த லோக்சபா தேர்தலில் கிருஷ்ணகிரியில், 1.50 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளோம். இம்முறை திண்டுக்கல் வெற்றியை போல், கிருஷ்ணகிரியில் வெற்றி பெற வேண்டும். தமிழக முதல்வர் கைகாட்டும் நபரே, இந்தியாவின் பிரதமராக வர வேண்டும். வரும், 21ல் சேலத்தில் நடக்கும் இளைஞரணி மாநில மாநாட்டில், பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், --நகர செயலாளர் நவாப் மற்றும் நிர்வாகிகள் உள்பட, தி.மு.க.,வினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை