மேலும் செய்திகள்
உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
16-Oct-2025
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, அரசம்பட்டி அரசு பெண்கள் உயர் நிலைப்பள்ளி சார்பில், நேற்று போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில், 400க்கும் மேற்பட்ட மாணவியர் மற்றும் பொறுப்பு தலைமை ஆசிரியர் தீபா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பள்ளி வளாகத்தில் இருந்து மாணவியர் போதைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பி, பேரணியாக புட்டன் கடை, அரசம்பட்டி, மஞ்சமேடு வழியாக சென்று பள்ளியை வந்தடைந்தனர். பாதுகாப்பு பணியில், பாரூர் போலீசார் இருந்தனர்.
16-Oct-2025