மேலும் செய்திகள்
தேன்கனிக்கோட்டைக்கு 11 யானைகள் விரட்டியடிப்பு
12-Dec-2024
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன் கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட நொகனுார் வனப்பகுதியில், 40க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன.இதில், தனித்தனியாக பல யானைகள் சுற்றித்திரிந்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு, நொகனுார் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, நொகனுார் கிராமத்திற்குள் புகுந்து சாலையில் உலா வந்தது. இதை பார்த்த கிராம மக்கள் அச்சமடைந்தனர்.விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளை ஒட்டி சுற்றித்திரிந்த ஒற்றை யானையை, அப்பகுதி மக்கள் மற்றும் வனத்துறையினர் பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டினர்.
12-Dec-2024