மேலும் செய்திகள்
இரவில் நெடுஞ்சாலையை கடந்த யானைகளால் பீதி
16-Mar-2025
தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகம் அய்யூர் வனப்பகுதியில், நேற்று முன்தினம் இரவு, 35 வயது ஆண் யானை தண்ணீர் தேடி கிராமத்தில் புகுந்தது. விவசாய தோட்டத்தில், 10 அடி ஆழ குட்டையில் தண்ணீர் குடிக்க இறங்கிய போது, குட்டையில் தவறி விழுந்து வெளியேற முடியாமல் பிளிறியது. நீண்ட நேரம் போராடியும் வெளியேற முடியவில்லை. அப்பகுதி மக்கள் தகவலின்படி, தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர் குழுவினர் பொக்லைன் உதவியுடன் யானையை மீட்டனர். ஆக்ரோஷத்துடன் வெளியேறிய யானையை, அய்யூர் வனப்பகுதிக்கு விரட்டினர்.
16-Mar-2025