உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மனைவியுடன் இன்ஜினியர் தற்கொலை

மனைவியுடன் இன்ஜினியர் தற்கொலை

ஓசூர்:கர்நாடகா மாநிலம், பெங்களூரு எச்.எம்.டி., லே--அவுட்டை சேர்ந்தவர் வம்ஷிதர் பசுபிலடி, 50. இவர் மனைவி தீனாவம்சி, 45, இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்த வம்ஷிதர், சமீபகாலமாக பணிக்கு செல்லவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டம், தளியில், ஜெபராணி, 36, என்பவரின் வாடகை வீட்டில் கடந்த ஓராண்டாக, மனைவியுடன் வசித்தார். கடந்த, 28ம் தேதிக்கு பின், கணவன், மனைவி இருவரையும் அக்கம் பக்கத்தினர் யாரும் பார்க்கவில்லை. உட்புறமாக பூட்டியிருந்த அவரது வீட்டிலிருந்து நேற்று துர்நாற்றம் வீசியதால், வீட்டின் உரிமையாளர் ஜெபராணி, தளி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார், அங்கு சென்று, வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது, படுக்கையறையில், கணவன், மனைவி இருவரும் இறந்து கிடந்தனர்; உடல்கள் அழுகிய நிலையில் இருந்தன. உடல்கள் மீட்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.அருகில், பூச்சிக்கொல்லி மருந்து பாக்கெட்டுகள் இருந்தன. அதை அவர்கள் சாப்பிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. தற்கொலைக்கான காரணம் குறித்து, தளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை