நெல் நாற்று நடவு; விவசாயிகள் தீவிரம்
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, பாரூர் பெரிய ஏரி இரண்டாம் போக சாகுபடிக்கு கடந்த டிச. 12ல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் கீழ்குப்பம், ஜிங்கல்கதிரம்பட்டி, தாதம்பட்டி உள்ளிட்ட பஞ்., விவசாயிகள், 2,000 ஏக்கருக்கு மேல் நெல் நாற்று விட்டு இருந்த நிலையில், தற்போது நெல் நாற்றை சேகரிக்கும் பணியிலும், அதேபோல் நெல் நடவு பணிக்கு விவசாய நிலத்தை தயார்படுத்தும் பணியிலும் விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.