மேலும் செய்திகள்
காய்ச்சல் தடுப்பு ஆய்வு கூட்டம்
30-Aug-2024
ஓசூர்: ஓசூர் மாநகராட்சியில், காய்ச்சல் தடுப்பு பணிகளை, மாநகராட்சி கமிஷ்னர் ஸ்ரீகாந்த் துவக்கி வைத்தார். மாநகராட்சியின், 4வது வார்டுக்கு உட்பட்ட சின்ன எலசகிரி, சென்ன பழனியப்பன் நகர், காமராஜ் நகர், பாலாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கொசு மருந்து அடித்தல், வீடு வீடாக சென்று கொசுப்புழுக்கள் உள்ளதா எனப்பார்த்து, அதை அழிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.வீடுகளிலுள்ள தேவையற்ற பொருட்களை அகற்றவும், பொதுமக்களுக்கு வழங்கும் குடிநீரில் குளோரின் கலந்து வழங்க வேண்டும், வார்டுகள் தோறும் நடத்தப்பட்ட மருத்துவ முகாம்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என, மாநகராட்சி கமிஷ்னர் ஸ்ரீகாந்த் உத்தரவிட்டார்.அப்போது, மாநகர நல அலுவலர் பிரபாகரன், மருத்துவ அலுவலர் டாக்டர் மஞ்சுநாத், துப்புரவு அலுவலர்கள் சரவணன், அன்பழகன் , துப்புரவு ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.
30-Aug-2024