உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தென்பெண்ணை ஆற்றில் 5வது நாளாக வெள்ளப்பெருக்கு

தென்பெண்ணை ஆற்றில் 5வது நாளாக வெள்ளப்பெருக்கு

ஓசூர்:ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து கடந்த, 5 நாட்களாக, 1,000 கன அடிக்கு மேல் நீர் திறக்கப்பட்டுள்ளதால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு கடந்த, 13ம் தேதி அதிகப்பட்சமாக, 1,465 கன அடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில், 1,220 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால், நேற்று முன்தினம் மற்றும் நேற்று என தொடர்ந்து இரு நாட்களாக, 1,220 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 1,220 கன அடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் வலது, இடது பாசன கால்வாய்களில் நீர் திறக்கப்படவில்லை. தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரையுடன் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து கடந்த, 10 முதல் நேற்று வரை தொடர்ந்து, 5 நாட்களாக 1,000 கன அடிக்கு மேல் நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என வருவாய்த்துறையினர் எச்சரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி