மேலும் செய்திகள்
விவசாயி மர்மச்சாவு
05-Oct-2025
தனியார் ஊழியரிடம் ரூ.8.11 லட்சம் மோசடி
05-Oct-2025
மைதானத்தை சீரமைத்த முன்னாள் மாணவர்கள்
05-Oct-2025
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த அட்டகுறுக்கியை சேர்ந்த மோகன்சக்தி என்பவரது வீட்டிற்குள் கடந்த, 11 இரவு புகுந்த மர்ம நபர்கள், 7 பவுன் தங்க நகையை திருடி சென்றனர். அதேபோல் கடந்த, 20 ல், தியாகரசனப்பள்ளியை சேர்ந்த அப்பையா என்பவரது வீட்டில், அரை பவுன் நகை, வெள்ளி பொருட்கள், 20 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது.இது தொடர்பாக, சூளகிரி போலீசார் வழக்குப்பதிந்து தனிப்படை அமைத்து விசாரித்தனர். கைரேகை பதிவுகளை வைத்து பார்த்த போது, சூளகிரி அடுத்த புக்கசாகரத்தை சேர்ந்த பால்ராஜ், 25, மாதேஷ், 24, கேசவன், 20, அங்கொண்டப்பள்ளி சேர்ந்த நவீன்குமார், 28, ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை நேற்று கைது செய்த போலீசார், 5 பவுன் தங்க நகை, 413 கிராம் எடை கொண்ட இரு வெள்ளி கொலுசு மற்றும் அரைஞான் கொடி, 30 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
05-Oct-2025
05-Oct-2025
05-Oct-2025