இலவச மருத்துவ முகாம்
பேரிகை: சூளகிரி அடுத்த பேரிகை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் குரு பவுர்ணமியை முன்னிட்டு, செயின்ட் பீட்டர்ஸ் மருத்-துவக் கல்லுாரி மருத்துவமனை மற்றும் ஷீரடி சாய்பாபா பக்தர்கள் குழு சார்பில், இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது. அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, மருத்து-வக்கல்லுாரி செயலாளர் டாக்டர் லாசியா தம்பிதுரை, ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீசன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.முகாமில், நுாற்றுக்கணக்கானோருக்கு, இதய நோய், பொது மருத்துவம், எலும்பியல், மகப்பேறியல், பல், காது, மூக்கு, தொண்டை, கண், குழந்தை மருத்துவம், நுரையீரல் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. கண் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு, இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரி மருத்து-வமனை கண்காணிப்பாளர் கிரீஸ் ஓங்கல், இருப்பிட மருத்துவர் பார்வதி, முன்னாள் பஞ்., தலைவர்கள் சின்னபையா, சாரதி, கிருஷ்ணப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.