2.5 ஆண்டுகளாகியும் திறக்காத அரசு கட்டடம்ரூ.70 லட்சம் வரிப்பணம் வீண் என குற்றச்சாட்டு
2.5 ஆண்டுகளாகியும் திறக்காத அரசு கட்டடம்ரூ.70 லட்சம் வரிப்பணம் வீண் என குற்றச்சாட்டுகிருஷ்ணகிரி, : கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி பஞ்., கீழ்புதுார் கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், 2017 - 18ம் ஆண்டு நிதியிலிருந்து, 70.75 லட்சம் ரூபாய் மதிப்பில், பஞ்., அளவிலான கூட்டமைப்பு கட்டடம் கட்டப்பட்டது. இப்பணி கடந்த, 2020 மே மாதம் துவங்கி, 2022 ஜூன் மாதம் நிறைவடைந்தும், பஞ்., மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை.புதர்மண்டி கிடக்கும் இக்கட்டடத்தை சுற்றிலும், அப்பகுதியினர் மாடுகளை கட்டி வருகின்றனர். திறந்திருக்கும் ஒரு அறை முழுவதும் குப்பை கொட்டப்பட்டுள்ளது. கட்டட முன் பகுதியில், குடிமகன்கள் மது குடித்து விட்டு பாட்டில்களை வீசி செல்கின்றனர். பொதுமக்களுக்காக, 70 லட்சம் ரூபாய் செலவில் கட்டி கட்டடம் திறக்கப்படாததால், மக்களின் வரிப்பணம் வீணாகி உள்ளதாக, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கட்டடத்தை பராமரித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை எழுந்துள்ளது.