உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓட்டு எண்ணும் மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

ஓட்டு எண்ணும் மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தில், 802 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் பதிவான ஓட்டுகள், நேற்று அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் எண்ணப்பட்டன. ஓட்டு எண்ணும் மையத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., தங்கதுரை தலைமையில் ஒரு ஏ.டி.எஸ்.பி., 8 டி.எஸ்.பி., 23 இன்ஸ்பெக்டர்கள், 76 எஸ்.ஐ.,, 771 போலீசார் என மொத்தம், 802 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஓட்டு எண்ணும் மையத்திற்கு இரண்டு நுழைவாயில்கள் வழியாக வந்த வேட்பாளர்கள், ஏஜன்டுகள் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். மொபைல் உட்பட எந்த மின்சாதனங்களையும் அனுமதிக்கவில்லை. 6 சட்டசபை தொகுதி ஓட்டு இயந்திரங்கள் உள்ள பகுதிகள், ஓட்டு எண்ணும் மையம் மற்றும், 100 மீ., துாரத்திற்கு முன் பேரிகார்டு அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.ஓட்டு எண்ணிக்கையையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும், முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டு இருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை