உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தேர்தல் விதிமுறைகள் அமல்: தலைவர்கள் சிலை மறைப்பு

தேர்தல் விதிமுறைகள் அமல்: தலைவர்கள் சிலை மறைப்பு

கிருஷ்ணகிரி: லோக்சபா தேர்தல் குறித்து, இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் பிற்பகல், 3:00 மணிக்கு அறிவித்தது. நாடு முழுவதும், 7 கட்டங்களாக தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தமிழகத்தில் ஏப்., 19-ல் தேர்தல் நடக்கிறது. தேர்தல் தேதியை ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் வைத்திருந்த முதல்வர், அரசின் சாதனை விளக்க படங்களை ஊழியர்கள் அகற்றினர். அதேபோல கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்ட், ரவுண்டானா, ராசுவீதியில் இருந்த தலைவர்களின் சிலைகள், கட்சி சின்னங்கள் துணியால் மறைக்கப்பட்டன. ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகங்களில் இருந்த முதல்வர், அமைச்சர் படங்கள், அவர்கள் உருவம் பதித்த காலண்டர்களும் அகற்றப்பட்டன.மேலும், கிருஷ்ணகிரி நகரின் முக்கிய வீதிகளில் இருந்த அரசியல் கட்சியினரின் பிளக்ஸ் பேனர்களை அகற்றி, போஸ்டர்களை கிழித்து, அரசியல் கட்சியினர் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியில், நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.* தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து, 24 மணி நேரம் கடந்தும், கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலம் முன்புள்ள மேம்பாலத்தின் இரு பக்ங்களிலும், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வினர் வரைந்த சுவர் விளம்பரங்கள் அழிக்கப்படாமல் உள்ளது. மேலும், ரவுண்டானா மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள, கட்சி கொடி கம்பங்களும் நேற்று மாலை வரை அகற்றப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்