அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர் விடுதி திறப்பு விழா
அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில்மாணவர் விடுதி திறப்பு விழாஓசூர், அக். 5-கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே போடிச்சிப்பள்ளியில் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி இயங்குகிறது. மாணவர்கள் தங்கி படிக்க வசதியாக, கல்லுாரி வளாகத்தில் பிற்படுத்தப்பட்டோர் விடுதி கட்டப்பட்டுள்ளது. இதை, மாவட்ட கலெக்டர் சரயு, எம்.எல்.ஏ.,க்கள் பிரகாஷ் (ஓசூர்), ராமச்சந்திரன் (தளி) ஆகியோர் நேற்று மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.தொடர்ந்து கலெக்டர் சரயு கூறுகையில்,''மாணவர்களுக்கு காலை உணவாக டிபன், மதிய உணவு, மாலை நேரங்களில் சுண்டல், சுக்குமல்லி காபி, டீ, இரவில் டிபன் வழங்கப்படும். மாணவர்கள் நல்ல முறையில் தொழில்கல்வி கற்று, வேலைவாய்ப்பில் சேர்ந்து, வாழ்க்கையில் முன்னேற வேண்டும்,'' என்றார்.மாவட்ட ஊராட்சி குழு தலைவி மணிமேகலை நாகராஜ், கெலமங்கலம் ஒன்றிய குழு தலைவர் கேசவமூர்த்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பத்மலதா, கல்லுாரி முதல்வர் கோவிந்தராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.