உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஐ.என்.டி.யு.சி., நிர்வாகிகள் கூட்டம்

ஐ.என்.டி.யு.சி., நிர்வாகிகள் கூட்டம்

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்ட ஐ.என்.டி.யு.சி., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், ஓசூரில் நேற்று நடந்தது. ஐ.என்.டி.யு.சி., தேசிய செயலாளர் மனோகரன் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பு செயலாளர் முனிராஜ் முன்னிலை வகித்தார். ஓசூர் சட்டசபை தொகுதி, காங்., தேர்தல் பார்வையாளர் கோபி பேசினார். கூட்டத்தில், 'இண்டியா' கூட்டணிக்கும், காங்., கட்சிக்கும் ஆதரவு தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, தேசிய செயலாளர் மனோகரன், நிருபர்களிடம் கூறியதாவது:தொழிலாளர்களுக்கு எதிரான, பா.ஜ., ஆட்சியை ஒழிக்க முடிவு செய்துள்ளோம். காங்., கட்சியை வாய்க்கு வந்தபடி பேசக்கூடிய நபர், நாட்டின் பிரதமராக இருக்கிறார் என்றால், இந்தியா தலைகுனிந்து நிற்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. பிரதமர் மோடி பேசுவது எல்லாம் பொய். 50 ஆண்டுக்கு பின் கச்சத்தீவை பற்றி பிரதமர் மோடி பேசுகிறார் என்றால், அவரெல்லாம் ஒரு நிர்வாகியா என, மக்களே முடிவு செய்து கொள்ளட்டும். 'இண்டியா' கூட்டணியை வெற்றி பெற செய்தால் தான், இந்தியாவின் தலை தப்பிக்கும். இல்லாவிட்டால், இலங்கை போன்று கேவலமான நிலைக்கு செல்லும்.இவ்வாறு, அவர் கூறினார்.ஐ.என்.டி.யு.சி., மாவட்ட பொருளாளர் பரமானந்த பிரசாத், காங்., மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன், மாநகர தலைவர் தியாகராஜன், மாவட்ட துணைத்தலைவர் கீர்த்திகணேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்