மேலும் செய்திகள்
திருடிய முதியவர் சிக்கினார்
24-Aug-2025
கிருஷ்ணகிரி,கிருஷ்ணகிரி மாவட்டம், எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மையம், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில், கிருஷ்ணகிரி வட்டாரத்தில் தொகுப்பு செயல்விளக்க திடலை, தாசிரிப்பள்ளி, கொண்டேப்பள்ளி கிராமங்களில், 40 ஹெக்டேர் பரப்பளவில், 100 விவசாயிகளின் நிலங்களில் செயல்படுத்தி வருகிறது. இச்செயல்விளக்க திடலில் பங்கேற்றுள்ள, 100 விவசாயிகளுக்கு இடு பொருளாக நிலக்கடலை, 'ரிச்' வழங்கும் நிகழ்ச்சி, தாசிரிப்பள்ளி கிராமத்தில் நேற்று நடந்தது. வட்டார வேளாண் உதவி இயக்குனர் புனிதவள்ளி, நிலக்கடலை சாகுபடியில் பின்பற்ற வேண்டிய சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் வேளாண் துறையின் மூலம் வழங்கப்படும் மானிய திட்டங்களை எடுத்துரைத்து, விவசாயிகளுக்கு நிலக்கடலை, 'ரிச்' இடுபொருளை வழங்கினார். வேளாண் அறிவியல் மைய மண்ணியல் தொழில்நுட்ப வல்லுனர் குணசேகர், நிலக்கடலை சாகுபடியில் மகசூலை அதிகரிக்க, உயிர் உரங்களின் பயன்பாடு, நிலக்கடலை சாகுபடியில் ஜிப்சம் மற்றும் நிலக்கடலை, 'ரிச்' இடுவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். வேளாண் அறிவியல் மைய திட்ட உதவியாளர் முகமது இஸ்மாயில், வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுனர்கள் செந்தில்குமார் (வேளாண் விரிவாக்கம்), கால்நடை மருத்துவர் ரமேஷ் (கால்நடை அறிவியல்), அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பார்த்தீபன் உள்பட பலர் பங்கேற்றனர்.
24-Aug-2025