காய்ச்சல் பாதிப்புள்ள பகுதியில் மருத்துவ முகாமிற்கு அறிவுறுத்தல்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் அரசின் முன்னோடி திட்டங்கள், வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், வணிக வரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளருமான ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமை வகித்து பேசியதாவது:பருவமழை காலத்தில் அதிகளவு வெள்ள அபாயம் ஏற்படும் பகுதிகளை கண்காணிப்பு அலுவலர்கள் தணிக்கை செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். காய்ச்சல் அதிகம் காணப்பட்டால், அவ்விடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். பொதுமக்களுக்கு குடிநீரை காய்ச்சி பருக அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், திட்ட இயக்குனர் கவிதா, மாவட்ட வன அலுவலர் பகான் ஜெகதீஷ் சுதாகர், ஓசூர் மாநகராட்சி கமிஷனர் முகம்மது ஷபீர் ஆலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.