உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மத்திய அரசின் மானியத்தில் சோலார் மூலம் மின்சாரம் தயாரிக்க விண்ணப்பிக்க அழைப்பு

மத்திய அரசின் மானியத்தில் சோலார் மூலம் மின்சாரம் தயாரிக்க விண்ணப்பிக்க அழைப்பு

மத்திய அரசின் மானியத்தில் சோலார் மூலம்மின்சாரம் தயாரிக்க விண்ணப்பிக்க அழைப்புகிருஷ்ணகிரி, நவ. 1-மத்திய அரசின் மானியத்தில், சூரிய தகட்டை பொறுத்தி மின்சாரம் தயாரிக்க, விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை:சூரிய சக்தியை பயன்படுத்தி, வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும், பிரதம மந்திரியின் சூரிய வீடு இலவச மின்சார திட்டம், கடந்த பிப்., 29ல் துவங்கப்பட்டது. மத்திய அரசின் நிதி உதவியுடன் இத்திட்டத்தின் மூலம், நாடு முழுவதும், ஒரு கோடி வீடுகளுக்கு சூரிய தகடுகள் பொறுத்தி, இலவச மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து வீட்டு மின் இணைப்பு உரிமையாளர்களும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு, வங்கிகள் மூலம் உடனடியாக கடன் பெறலாம். மத்திய அரசால் மானியமும் வழங்கப்படுகிறது. ஒரு கிலோ வாட்டிற்கு, 30,000 ரூபாய், 2 கிலோ வாட்டிற்கு, 60,000 ரூபாய், 3 கிலோ வாட் மற்றும் அதற்கு மேல், 78,000 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. ஒரு கிலோவாட் சூரிய தகடு ஒரு நாளில், 4 முதல், 5 யூனிட்டுகள் வரை மின்சாரம் உற்பத்தி செய்யும். நுகர்வோர் செய்யும் முதலீடு குறுகிய காலத்தில் திரும்ப பெறலாம். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க, www.pmsuryaghar.gov.in, www.solarrooftop.gov.inஆகிய இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். எனவே, பொதுமக்கள் இத்திட்டத்தை பயன்படுத்தி, தங்களது இல்லத்தில் சூரிய தகடுகளை பொறுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை