உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றவலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ பேரணி

தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றவலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ பேரணி

தர்மபுரி:தேர்தல்கால வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி, ஜாக்டோ - ஜியோ சார்பில், நேற்று தர்மபுரியில் பேரணி நடந்தது. தர்மபுரி பி.டி.ஓ., அலுவலகம் முன் பேரணியை, தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் காமராஜ் தொடங்கி வைத்தார். முக்கிய கடைவீதிகள் வழியாக, வந்த பேரணி தர்மபுரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே சென்றடைந்தது. அங்கு நடந்த கோரிக்கை விளக்க கூட்டத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன், செயலாளர் தெய்வானை, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் கவுரன் உட்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.* ஜாக்டோ - ஜியோ சார்பில், கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலையில் இருந்து டி.பி., சாலை வழியாக, பல்வேறு துறை அரசு அலுவலர்கள் பேரணியாக சென்று புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரன், கிருஷ்ணமூர்த்தி கூட்டு தலைமை வகித்தனர். இதில் கடந்த, 2003 ஏப்., 1க்கு பிறகு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு தற்போதுள்ள பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும். அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசு பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பல்வேறு துறைகளில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுனர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண் பாட்டினை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட, தேர்தல் கால வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை