மேலும் செய்திகள்
பத்ரகாளியம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம்
27-May-2025
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, விளங்காமுடி, கோடிப்புதுாரில், தென்பெண்ணை ஆற்றின் கரை மீது அமைந்துள்ள பத்ரகாளியம்மன் கோவிலின், 115வது ஆண்டு திருவிழா நடந்தது. நேற்று கங்கையிலிருந்து அம்மனை அழைத்து வந்து, சுவாமி தரிசனம் செய்து, திருவிழாவின் புகழ்பெற்ற பரணை ஏறுதல் நிகழ்ச்சி நேற்று காலை, 11:00 மணிக்கு தொடங்கி, 2:00 மணி வரை நடந்தது. இதில், பத்ரகாளியம்மன், பெரியண்ணன், சின்னண்ணன், கருப்புராயன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு, சிறப்பு பூஜை செய்து, அம்மனை அழைத்து பின்னர், பரண் ஏறி ஆடுகளின் வயிற்றை இரண்டாக பிளந்து, அதில் பழங்களை கொட்டி, அதை பிரசாதமாக வாரி இறைத்ததை பக்தர்கள் பெற்றுக் கொண்டனர். இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள், 1,000 ஆடுகள் பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்துார், பொள்ளாச்சி, கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, 20,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பர்கூர் டி.எஸ்.பி., முத்துகிருஷ்ணன் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
27-May-2025