உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரி ஐயப்பன் கோவில் 38ம் ஆண்டு மண்டல பூஜை

கிருஷ்ணகிரி ஐயப்பன் கோவில் 38ம் ஆண்டு மண்டல பூஜை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி - சேலம் சாலை ஐயப்பன் கோவில், 38ம் ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை, 5:30 மணிக்கு, மஹாகண-பதி ஹோமம், பால் அபிஷேகம், கலச பூஜை, ஐயப்பனுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.காலை, 10:30 மணிக்கு, கொடிமரத்திற்கு பூஜை செய்து கொடியை ஏற்றி வைத்தனர். இதில் திர-ளான பக்தர்கள் பங்கேற்றனர். மாலை, நாட்டியப்-பள்ளி மாணவியரின் பல்சுவை மற்றும் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அத்தாழ பூஜை, தீபாராதனை, ஹரிவராசனம் நடந்தது.இன்று காலை, கலச பூஜை, கன்னிமூல பூஜை உள்ளிட்டவையும், மாலை, ஐயப்பன் பஜனை பாடல்களும் நடக்கிறது. நாளை காலை, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் மற்றும் நாக-ராஜர், நாகராணி சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.மாலை, 6:00 மணிக்கு, 108 திருவிளக்கு பூஜை, கேரள செண்டை மேளம் முழங்க, சுவாமி பள்ளி-வேட்டை புறப்படுகிறார். 27 காலை, கோமாதா தரிசனம், 8:30 மணிக்கு, தென்பெண்ணை ஆற்-றிற்கு சுவாமி ஆறாட்டு புறப்படுதல், கொடி இறக்கம், கலசாபிஷேகம், உச்சிகால பூஜை, அன்-னதானம், மண்டல பூஜை நிறைவு தீபாராதனை, மாலை, ஐயப்ப சுவாமி திருவீதி உலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை