நாட்டு துப்பாக்கியுடன்சுற்றிய 2 பேருக்கு காப்புகிருஷ்ணகிரி: சிங்காரப்பேட்டை போலீசார், கொல்லகொட்டாய் அருகே உள்ள படத்தானுாரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த, 2 பேரை சோதனை செய்ததில், அவர்கள் ஒரு நாட்டுத்துப்பாக்கியும், 2 பேட்டரிகளும் வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில், அவர்கள் படத்தானுாரை சேர்ந்த கோவிந்தராஜ், 45, திருப்பத்துார் அங்கநாதன்வலசை பகுதியை சேர்ந்த தேவேந்திரன், 65, என்பதும், அவர்கள் வன விலங்குகளை வேட்டையாட துப்பாக்கியுடன் சென்றதும் தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்ஓசூரில் வீடுகளில் துண்டு பிரசுரம்ஓசூர்: ஓசூர் மாநகராட்சி, 6 வது வார்டுக்கு உட்பட்ட கே.சி.சி., நகரில் கடந்த, 3 மாதமாக குடிநீர் பிரச்னை உள்ளது. டிராக்டர் மற்றும் லாரிகள் மூலம், பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் நிலையில் மக்கள் உள்ளனர். இது தொடர்பாக, கே.சி.சி., நகர் அசோசியேஷன் நிர்வாகிகள், மாநகராட்சி கமிஷனர் சினேகாவிடம் மனு கொடுத்தனர். ஆனால், இதுவரை குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நேற்று, தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு செய்த கே.சி.சி., நகர் பகுதி மக்கள், ஒன்று கூடி ஆலோசனை செய்து, தங்கள் வீடுகள் முன், 'நோ தண்ணீர், நோ ஓட்டு' என துண்டு பிரசுரத்தை ஒட்டியுள்ளனர்.