| ADDED : ஜூலை 19, 2011 12:23 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சீட்டாடிய 20 பேரை போலீஸார் கைது செய்தனர். ஓசூர் டவுன் எஸ்.ஐ., ரகுநாதன் மற்றும் போலீஸார் எம்.ஜி.ஆர்., மார்க்கெட் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அந்த பகுதியில் பணம் வைத்து சீட்டாடி கொணடிருந்த முனிராஜ் (31), சரவணன் (30) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். பாகலூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் போலீஸார் கொத்தப்பள்ளியில் ரோந்து சென்ற போது அங்கு பணம் வைத்து சீட்டாடி கொண்டிருந்த பிரகாஷ் (32), நாகராஜ் (28) ஆகியோரை கைது செய்தனர்.சிப்காட் இன்ஸ்பெக்டர் தணிகாசலம் மற்றும் போலீஸார் சிப்காட் பகுதியில் ரோந்துசென்ற போது அங்கு பணம் வைத்து சீட்டாடி கொண்டிருந்த சரவணன் (32), முருகேசன் (33), சீனப்பா (41), கிருஷ்ணமூர்த்தி (28), ராஜசேகர் (28) ஆகிய ஐந்து பேரையும் கைது செய்தனர். கிருஷ்ணகிரி தாலுகா எஸ்.ஐ., சுப்பிரமணி மற்றும் போலீஸார் தாளப்பள்ளி மலையடிவாரத்தில் ரோந்து சென்ற போது பணம் வைத்து சீட்டாடி கொண்டிருந்த திருப்பதி (32), சீனிவாசன் (31) ஆகிய இருவரையும் கைது செய்தனர். குருபரபள்ளி எஸ்.ஐ., ÷ஷாபனா தேவி மற்றும் போலீஸார் சிக்காரிமேடு பகுதியில் ரோந்துசென்ற போது மாந்தோப்பில் பணம் வைத்து சீட்டாடி கொண்டிருந்த சம்பத் (25), அபிலான் (25), சுரேந்த ர்(23) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.சூளகிரி எஸ்.ஐ., சின்னமுத்து மற்றும் போலீஸார் சூளகிரி மலையடிவராத்தில் ரோந்து சென்ற போது அந்த பகுதியில் பணம் வைத்து சீட்டாடி கொண்டிருந்த வெங்கடேசன் (28), செம்பரசனப்பள்ளி அருண்குமார் (23) ஆகியோரை கைது செய்தனர். போச்சம்பள்ளி எஸ்.ஐ., கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீஸார் சந்தூர் பகுதியில் ரோந்து சென்றபோது, மாந்தோப்பில் பணம் வைத்து சீட்டாடி கொண்டிருந்த வெப்பாலம்பட்டி பழனிசாமி (26), சபரிநாதன் (22), தங்கவேல் (56), ரமேஷ் (37) ஆகியோரை கைது செய்தனர். மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் ஒரே நாளில் பணம் வைத்து சீட்டாடிய 20 பேரை போலீஸார் கைது செய்தனர்.