உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பாம்புகள் குறித்த ஃபோட்டோ கண்காட்சி

பாம்புகள் குறித்த ஃபோட்டோ கண்காட்சி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் பாம்புகள் குறித்த சிறப்பு புகைப்பட கண்காட்சி துவக்க விழா நடந்தது. அருங்காட்சிய காப்பாட்சியர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். கலை ஆசிரியர் பன்னீர் செல்வம் முன்னிலை வகித்தார். கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரி விலங்கியல் துறை தலைவர் ஞானசேகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தார். இந்திய மற்றும் வெளிநாட்டு பாம்புகளின் 40க்கும் மேற்பட்ட ஃபோட்டோக்கள் வைக்கபட்டிருந்தது. பாம்புகள் குறித்த நம்பிக்கைகள், அவற்றை பற்றிய உண்மைகள் போன்ற விளக்க அட்டைகளும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது. இரு நாட்கள் நடந்த இந்த கண்காட்சியை கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் உள்ளிட்ட பல பள்ளிளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பார்த்தனர். ஏற்பாடுகளை அருங்காட்சிய தொழில்நுட்ப உதவியாளர் அசோகன் மற்றும் பணியாளர்கள் கிருஷ்ணன், திருவள்ளுவன் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை