உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பெற்றோருக்கு கொலை மிரட்டல் கூலித்தொழிலாளி கைது

பெற்றோருக்கு கொலை மிரட்டல் கூலித்தொழிலாளி கைது

தேன்கனிக்கோட்டை : கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த கெத்தள்ளி அருகே தோட்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பா, 65, விவசாயி; இவரது மகன் முத்துராஜ், 40, கூலித்தொழிலாளி; இவர் தனது தந்தையிடம், நிலம் கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு வீட்டிற்கு வந்த முத்துராஜ், தனது தாய், தந்தையை கெட்டவார்த்தையால் திட்டி கையால் அடித்ததுடன், தான் மறைத்து வைத்திருந்த உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை எடுத்து வந்து, சுட்டு கொன்று விடுவதாக மிரட்டினார்.இதனால் அவரது தந்தை முனியப்பா, தேன்கனிக்கோட்டை போலீசில் நேற்று புகார் செய்தார். தகாத வார்த்தையால் திட்டுதல், கொலை மிரட்டல், இந்திய ஆயுத சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிந்து, முத்துராஜை கைது செய்ததுடன், நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை