உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பச்சையம்மன் கோவிலில் மஹா கும்பாபிேஷக விழா

பச்சையம்மன் கோவிலில் மஹா கும்பாபிேஷக விழா

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே, பச்சையம்மன் கோவில் மஹா கும்பாபி ேஷக விழா நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த மாரிகவுண்டன் சவுளூர் கிராம மக்கள் நிர்வகிக்கும் கோவிலுார் கிராமத்தில் அமைந்துள்ள, பச்சையம்மன் கோவில் ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. கடந்த மாதம், 23 காலை முளைப்பாரி இடுதல், கொடி ஏற்றம் ஆகியவை நடந்தன. நேற்று முன்தினம் காலை, கணபதி ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், நவகிரஹ ஹோமம், பூர்ணாஹூதி, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதல், 108 திரவிய ஹோமம், ஆகியவை நடந்தன.நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜை, மஹா வேள்வி, மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை, கடம் புறப்பாடு, 10:00 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிேஷகம் நடந்தன. பின், கோ பூஜை, தம்பதி பூஜை, கன்யா பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை