உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரசு பஸ் கண்டக்டரை தாக்கியவர் கைது

அரசு பஸ் கண்டக்டரை தாக்கியவர் கைது

அரசு பஸ் கண்டக்டரை தாக்கியவர் கைது கிருஷ்ணகிரி, டிச. 18-சேலம் சிவாய நகரை சேர்ந்தவர் சங்கர், 62, ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். தற்போது தற்காலிக கண்டக்டராக அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த, 16ல், சேலத்தில் இருந்து வேலுார் சென்ற பஸ்சில் கண்டக்டராக பணியில் இருந்தார். அப்போது ஊத்தங்கரை அடுத்த சின்ன குன்னத்துாரை சேர்ந்த சத்யராஜ், 33 என்ற தொழிலாளி மது போதையில் பஸ்சில் பயணித்தார். அவர், பஸ்சை உப்பாரப்பட்டியில் நிறுத்துமாறு கூறினார். அப்போது கண்டக்டர், இந்த பஸ் உப்பாரப்பட்டியில் நிற்காது, காரப்பட்டுவில் இறங்குமாறு கூறினார். இதில், ஏற்பட்ட வாக்குவாதத்தில், சத்யராஜ், சங்கரை கையாலும், இரும்பு கம்பியாலும் தாக்கினார். இது குறித்து சங்கர் அளித்த புகார்படி, ஊத்தங்கரை போலீசார் சத்யராஜை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை