உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / முத்தரப்பு கூட்டத்தை விரைந்து கூட்ட மா விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை

முத்தரப்பு கூட்டத்தை விரைந்து கூட்ட மா விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை

கிருஷ்ணகிரி: மா விவசாயிகளின் நலன் கருதி, முத்தரப்பு கூட்டத்தை மாவட்ட நிர்வாகம் விரைந்து கூட்ட வேண்டும்.இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளின் கூட்டமைப்பு தலைவர் சவுந்திரராஜன் கூறியதாவது:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் முதல் ஜூன் மாதம் இறுதி வரை மாங்கனிகள் அறுவடை செய்யப்படுகிறது. இந்தாண்டு மழையின்றி மா விளைச்சல், 80 சதவீதம் பாதித்துள்ளது. தற்போது அறுவடை செய்ய உள்ள மாங்கனிகளுக்கும் உரிய விலை இல்லை. மா விவசாயிகளின் உழைப்பை சுரண்டுவதை, தமிழக அரசால் தடுக்க முடியவில்லை. மாங்கனி மாவட்ட விவசாயிகளின் நிலை பரிதாபமாக உள்ளது. மாவட்ட வேளாண் துறைகள் விவசாயிகளின் பாதிப்பை உணரவில்லை.அண்டை மாநிலங்களில், மா விவசாயிகளுக்கு என, சிறப்பு திட்டமாக கிலோ ஒன்றுக்கு, 5 ரூபாய் ஊக்கத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது. அதேபோல், தமிழக மா விவசாயிகளுக்கும், சிறப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். எனவே, இந்த ஆண்டிற்கான முத்தரப்பு கூட்டத்தை, மாவட்ட நிர்வாகம் உரிய நேரத்தில் நடத்தாமல், காலம் தாழ்த்தி யாருக்கு உதவ நினைக்கிறார்கள் என தெரியவில்லை. எனவே, மா விவசாயிகளின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் முத்தரப்பு கூட்டத்தை விரைவில் கூட்ட வேண்டும். இத்தகைய மந்தமான சூழ்நிலையில், தனியார் மாங்கனி மண்டிகள், மா விவசாயிகளுக்கு நல்ல விலை பெற்றுத்தருவது வரவேற்கத்தக்கது.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ