உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கி.கிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாரத்தான் போட்டி; 356 பேர் பங்கேற்பு

கி.கிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாரத்தான் போட்டி; 356 பேர் பங்கேற்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், அண்ணாதுரை பிறந்தநா-ளையொட்டி, நேற்று காலை மாரத்தான் ஓட்ட போட்டிகள் நடந்தன. போட்டிகளை, டவுன் இன்ஸ்பெக்டர் வெங்கட்பிரபு துவக்கி வைத்தார். இதில், 17 முதல், 25 வயது பிரிவு இளைஞர்க-ளுக்கு, 8 கி.மீ., தொலைவும், பெண்களுக்கு, 5 கி.மீ., 25 வயதிற்கு மேற்பட்ட இளை-ஞர்களுக்கு, 10 கி.மீ., மற்றும் பெண்களுக்கு, 5 கி.மீ., தொலைவு மாரத்தான் போட்டிகள் நடந்-தன.மாரத்தான் போட்டி, மாவ ட்ட விளையாட்டு அரங்கில் துவங்கி, விஜய் வித்யாலயா பள்ளி வழியாக கே.பூசாரிப்பட்டி வரை சென்று, மீண்டும் மாவட்ட விளையாட்டு அரங்கில் முடிந்-தது. இதில், 17 முதல், 25 வயது பிரிவில், 156 ஆண்கள், 62 பெண்கள், 25 வயது பிரிவில், 97 ஆண்கள், 41 பெண்கள் என மொத்தம், 356 பேர் பங்கேற்றனர்.போட்டியில், 17 முதல், 25 வயது ஆண்கள் பிரிவில், நியாமத் முதலிடம், தருண்குமார், 2ம் இடம், விக்னேஷ், 3ம் இடம், பெண்கள் பிரிவில் பிரியா முதலிடம், சவுமியா, 2ம் இடம், தனுஜா, 3ம் இடம் பெற்றனர். 25 வயது ஆண்கள் பிரிவில், திருப்பதி முதலிடம், கோவிந்தராஜ், 2ம் இடம், வீர-குமார், 3ம் இடம், பெண்கள் பிரிவில், சஹானா முதலிடம், கோபிகா, 2ம் இடம், கீதா, 3ம் இடம் பெற்றனர். முதல் இடம் பிடித்தவர்களுக்கு, 5,000 ரூபாய், 2ம் இடத்திற்கு, 3,000 ரூபாய், 3ம் இடத்-திற்கு, 2,000 ரூபாய் மற்றும் பாராட்டு சான்றி-தழ்கள் வழங்கப்பட்டன. மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் மற்றும் விளையாட்டு பயிற்றுனர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை