உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூர் அருகே பால் வியாபாரி கொலை தனிப்படை போலீசார் கர்நாடகாவில் முகாம்

ஓசூர் அருகே பால் வியாபாரி கொலை தனிப்படை போலீசார் கர்நாடகாவில் முகாம்

ஓசூர்: ஓசூர் அருகே நடந்த பால் வியாபாரி கொலை தொடர்பாக, தனிப்படை போலீசார் கர்நாடகாவில் முகாமிட்டு சந்தேகத்தின் பேரில் இருவரை தேடி வருன்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா, பாகலுார் அருகே எழுவப்பள்ளியை சேர்ந்தவர் முனிராஜ், 44; பால் வியாபாரி. கடந்த, 6 இரவு ஊருக்கு செல்லும் வழியில், மர்ம நபர்களால் கத்தியால் குத்தி, இரும்பு ராடால் தாக்கி கொலை செய்யப்பட்டார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த முனிராஜின் தந்தை கோபாலப்பா மீது இருந்த முன்விரோதம் காரணமாக, அவரது மகன் முனிராஜ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. அதன்படி, எழுவப்பள்ளியை சேர்ந்த மது மற்றும் அவரது சித்தி மகன் விஜயகுமார் ஆகியோரை போலீசார் சந்தேகத்தின் பேரில் தேடி வருகின்றனர்.அவர்கள் இருவரது மொபைல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால், இக்கொலையில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் பாகலுார் போலீசாருக்கு எழுந்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் விஜயகுமார் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். அதனால், அம்மாநிலத்தில் அவர்கள் பதுங்கியிருக்கலாம் என்ற கோணத்தில், பாகலுார் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான இரு தனிப்படை போலீசார், அங்கு முகாமிட்டு இருவரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை