தேசிய சித்த மருத்துவ தினம்
போச்சம்பள்ளி, டிச. 24-கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அரசு மருத்துவமனை வளாகத்தில், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் முன்னிலையில், நேற்று தேசிய சித்த மருத்துவ தினத்தையொட்டி, இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் மூலிகை கண்காட்சி நடத்தப்பட்டது. இதில், போச்சம்பள்ளி பஞ்., தலைவர் சாந்தமூர்த்தி, ஜி.ஹெச்., தலைமை மருத்துவர் நாராயணசாமி, சித்த மருத்துவர் தனலட்சுமி மற்றும் அரசு மருத்துவமனை, சித்த மருத்துவமனையை சேர்ந்த பணியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மூலிகை சம்மந்தப்பட்ட கபசுர குடிநீர், முருங்கை சூப், மூக்கடலை சுண்டல், தேன் கலந்த கம்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டன.