மேம்பாலம் அமைக்க கோரிக்கை பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தர்மபுரியில் இருந்து ராயக்கோட்டை, ஓசூர் வழியாக கர்நாடகா மாநிலத்திற்கு, 4 வழி தேசிய நெடுஞ்-சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில், மத்திகிரி, உத்தனப்-பள்ளி, கருக்கனஹள்ளி, எச்சனஹள்ளி ஆகிய பகுதிகளில், சாலை பணிகளை மாவட்ட கலெக்டர் சரயு ஆய்வு செய்தார். உத்தனப்பள்ளியில் சுரங்கப்பாதை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது தொடர்பான இடத்தை ஆய்வு செய்தார். எச்சனஹள்ளி கிராமத்தில் இழப்பீட்டு தொகையை பெற்று கொண்டு. சாலை பணியை மேற்கொள்ள நிலத்தை தர மறுக்கும் தனிநபரின் இடத்தை பார்வையிட்டார். கருக்கனஹள்ளி கிரா-மத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையை ஆய்வு செய்து, புதிய மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக மக்களின் பேசினார். தனி தாசில்தார்கள் தேன்மொழி, கோபிநாத் உடனிருந்தனர்.